Saturday, July 22, 2006

உப்புக் கலந்த சுவை இருக்கிறதே அது ஒரு அலாதிதான்....

இன்று காலை சிறு தூறல்.... கொஞ்சம் குளிர்ச்சி..... அற்புதமான காலைப்பொழுது. காரணம் கடந்த வாரம் முழுக்க கனடாவில் வெயிலின் கொடுமை அப்பப்பா தாங்க முடியாது. அதுதான் என்னவோ வானை மறைத்த கருமேகங்களும், மழைத் தூறல்களும் என்னை இப்படி உணர வைத்திருக்கிறது.

இன்று சனிக்கிழமை தொழிக்குப் போகவேண்டியதில்லை. நேற்று இரவு நண்பனின் வருகை, பக்கத்து உணவுச் சாலையில் இரண்டு முடா (பிச்சர்) அலைக்சாந்தர் கீற்ஸ் பீர்ரும், ‘சிக்கன் சுவலாக்கி’ இரவுச்சாப்பாடும் வயிறு முட்ட விழுங்கிப்போட்டு நாலு அரசியலை அலசிப்போட்டு வந்து படுத்தது தான்.

கொழும்பில இருந்தபோது வழக்கமாக சனிக்கிழமைகளில் கடைக்குப்போய் பத்திரிகைகளை வாங்கி வந்து அம்மா போடுற லக்ஸ்பிறே மா தேத்தண்ணி தண்ணியையும் குடித்துக்கொண்டு செய்திகளையும், கட்டுரைகளையும் வாசிப்பது வழங்கம்.

அதுபோன்ற ஒரு உணர்வில் பாலா கடை தோசையும் சாம்பாரும் இரண்டு உளுந்து வடையும் சாப்பிப்பிட்டுப் போட்டு பக்கத்து தமிழ் கடையில் இந்த வாரம் வந்த இலவச தமிழ்ப்பத்திரிகைகளோட மெல்லிய மழைத் தூறல்களில் நனைந்து கொண்டு வரும்போது, தூறல்கள் எல்லாம் சேர்ந்து சிறு துளிகளாக மாறி தலையில் இருந்து நெற்றியால் வழிந்து மூக்கு நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த மழைத் துளியை நாக்கினால் தட்டும்போது உப்புக் கலந்த சுவை இருக்கிறதே அது ஒரு அலாதிதான். (என்னென்று உப்புச் சுவை வந்தது என்று கேக்கக் கூடாது. இப்ப விஞ்ஞான விளக்கம் தர எனக்கு பொறுமையில்லை) தமிழில் ஒரு பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையில’. கனடாவில வெளிவரும் அனேகமான தமிழ் பத்திரிகைகளில உப்பு இருக்கோ இல்லையோ, குப்பையில போடவேண்டிய சமாச்சாரம் தான். ‘என்ன கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சொல்லுற மாதிரி சிலர் யோசிக்கலாம். உண்மைதான் நான் விளம்பரங்களைப் பற்றி கதைக்கவில்லை. மற்றவிடையங்களைப் பற்றித்தான் சொல்லுகிறேன்.’

கனடாவில இருந்து ‘முழக்கம்’ என்ற பத்திரிகை வெளிவருகின்றது. அதனுடைய எல்லாப்பக்கங்களின் உச்சியில ஒரு வாசகம் இருக்;கும். ‘புலிகளும் இந்நாள் இல்லையேல் எலிகளும் தின்னும் இத்தமிழர் இனத்தையே!’ ‘தேங்காச்சொட்டு, பற்பொடி, சவர்க்காரத்துண்டு’ லெவலுக்கு (மட்டம்) தமிழர் இனத்தை முழக்கம் கணிப்பிட்டிருப்பது மாதிரியே எனக்குப்படுகிறது.

முழக்கத்தின் இரண்டாவது பக்கத்தில் ‘மக்கள் களம்’ என்று இருக்கின்றது. அதில் வாசகர்களின் கருத்துக்கள் கொஞ்சம் இருக்கும். (அதில் அனேகமானவை பத்திரிகை நடத்துபர்களே கருத்துக்களை எழுதுவது) அதற்குப் பக்கத்தில் பொன்னர், மன்னர் என்ற உரையாடல் பத்தியும் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது இந்தப் பத்தி குறிப்பிட்ட சிலருக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவது என்றால் அது கலப்படம் அற்ற உண்மை.
(இங்குள்ள தமிழ் பத்திரிகைகள் வியாபாரத்திற்காக எதை எல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்பதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்ல முயற்சிக்கிறேன்.)

பார்ப்பணிய எதிர்ப்புவாதம், தமிழ்த்தேசியம், தூயதமிழ் சொற்றகள், தமிழ்நாட்டு திருமாவளவன் புலம்பல், பெரியாரியம்..... என்று அவ்வப்போது விளம்பரங்கள் போட்ட மிகுதிப்பக்கங்களில் போடுவது வழக்கம்.

இம் முறை பொன்னர் மன்னர் பகுதியில், கடந்த வாரம் ‘வைகறை’ என்ற பத்திரிகையில் வெளிவந்த நிருபாவின் செவ்வியை (சுணைக்கிறது, அச்சாப்பிள்ளை ஆசிரியர்) அலசியிருந்தூர்கள். அதில் நிருபாவிடம் பெண் போராளிகள் பற்றிய கேள்வியில் அவர் சொல்லுகிறார்,
“பெண்புலிகளின் பெண்விடுதலை என்பது ஒரு மாயை என்றே எனக்குத் தோன்றுகின்றது போராட்டச் சூழலில் போராளி என்ற வகையில் ஒர பொதுத்தன்மை தான் இது. மற்றும்படி முடிவெடுக்கும் அதிகாரங்கள், தன்மைகள், தகமைகள் ஆண்களிடமே தேங்கிக்கிடக்கின்றது. போராட்டச் சூழல் நிறைவு பெறும் போது இவர்கள் மீண்டும் “அதே பெண்’ ஆகவே வீட்டுக்கு அனுப்படுவார்கள். இதே நிலையே இரண்டாம் உலகயுத்தத்தின் போது ஜெர்மனியிலும், மற்றும் பல நாடுகளிலும் நடந்திருக்கின்றது என்பது தான் வரலாறு.”

நிருபாவின் இந்தக் கருத்திற்கு முழக்கத்தில் ‘விலாவாரியாக நல்கல்’ அடித்திருந்தார்கள்.

பிறகு அடுத்தடுத்தடுத்த பக்கங்களை புரம்போது கடந்தவாரம் நிருபாவின் புத்தக வெளியீட்டுக்கான முழுப்பக்க விளம்பரம், வெளியீடு முடிந்த பிற்பாடும் இந்தப் பத்திரிகையில் வெளிவந்திருப்பதை பார்த்தபோது ஆகா... ஆகா.... நல்லாச் செய்யுறாங்கள். இது ஒரு ‘பிள்ளையார் சுழி’ மட்டும்தான்
இதெல்லாம் பார்த்த பிற்பாடு முழக்கத்திடம் நையாண்டியா ஒரு கேள்வி கேட்க வேணும் போல் இருந்தது.

‘எலியிடம் இருந்து தமிழ் மக்களை புலி காப்பாற்றுகின்றது பிறது புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற யாரிடம் போவது இதையும் முழக்கம் நேரகாலத்தோட கண்டு வைப்பது நல்லது.

பாவம் தமிழ் மக்கள்
குகையின் வாயிலில் நிற்கின்றார்கள்....

3 comments:

Anonymous said...

நாசமறுப்பான் கனடவில் முழக்கமில்லையேல் தமிழ் புழக்கமில்லை
அப்படியிருக்கும்போது நாசமறுப்பிடமிருந்து இப்படி ஒரு பின்னுட்டமா
நசமாபோக...
விளம்பரம் போட்டுமிஞ்சிய பகுதிய என்னதான் செய்யுறது அங்க இங்க
என்று அலம்பி புலம்பி வெட்டி ஒட்டி வாரத்தை நிறைவு செய்ய வேண்டாமோ...?
அதுசரி நாசமறுக்க ஏன் இவ்வளவு நாள் இடைவெளி அடிக்கடி வந்து
அறுக்கலாமே

கனடா பிரியன்

Anonymous said...

நாசமறுப்பான்,
முழக்கத்தில் வந்த பகுதிக்கு எதுக்கு புளொக்கில எழுதுறியள்? முழக்கதில எல்லோ முழங்கியிருக்க வேணும்.. அப்ப எண்டாலும் அவையள் திருந்திவீனமோ எண்டு பாத்திருக்கலாம். சும்மா அங்க இங்க கடிச்சுத் துப்பிக்கொண்டு தாங்களும் பத்திரிகை நடத்திற மாதிரிக் காலத்தை ஓட்டுறீனம். எல்லாரையும் நக்கலடிக்கிறது எண்டது லேசான விஷயம். ஆனால் தங்களால ஒரு தரமான பத்திரிகை நடத்தத் முடியேலை உதுக்கு நாங்கள் என்னத்தைச் சொல்லுறது சொல்லும் பாப்பம் நாசமறுப்பான்..

Anonymous said...

Hi Nasamaruppan,
your kadi thanka mudiyala