Sunday, August 27, 2006

தேனி - நிதர்சனம் இணையத்தளங்களின் பொறுப்பற்ற போக்கு!

தற்போது தமிழில் ஏராளமாக இணையத்தளங்கள் இலங்கைச் செய்திகளையும், தமிழர் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும், ஏனைய பல விடையங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் கணிசமான இணையத்தளங்கள் புலிகளின்; அரசியலுக்கெதிராகவும், அவர்களின் போராட்ங்கள், சிந்தனைகள், நடவடிக்கைள் போன்றவற்றுக்கெதிராகவும் தமது எதிர்ப்பினையும், கருத்தினையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்கள் பெரும்பாலும் புலிகளினால் தடைசெய்யப்பட்ட, ஏனைய தமிழ் இயக்கங்களினதும், அல்லது புலி அரசியலுக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களினாலும் நடாத்தப்படுகின்றது.

அந்த வகையில் தேனி இணையத்தளம் பரவலாக அறியப்பட்ட ஒன்றாம். ஆரம்ப காலங்களில் தேனியில் வரும் எழுத்துகள் புலிகளின் போக்கிற்கு மாற்றுக் கருத்தாக அல்லது புலிகளின் அரசியலை கருத்தியல் ரீதியாக விமர்சிக்கும் போக்கினைக் கொண்ட தளமாக காணக்கூடியதாக இருந்து. பின்னர் வெறும் புலி எதிர்ப்புப் பிரச்சாரமாகவும், புலிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தகவல்களை திரித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதில் சிறிதும் தயக்கம் காட்டாமல் வெளியிடும் அளவிற்கு அவர்களின் வறட்டு அல்லது சீரழிந்த அரசியல் சிந்தனை மேலோங்கியிருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது.

கடந்த வருடம் புங்குடுதீவு என்னும் கிராமத்தில் ஒரு இளம் பெண் தனது பெயரியதாயார் வீட்டுக்கு ஒவ்வொரு மலைப்பொழுதிலும் சென்று பின்னர் மறுநாள் காலையிலேயே தனது வீட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்பெண் பெரியதாயார் வீட்டுக்குச் செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் முகாமைத் தாண்டிச் செல்வதும் வழக்கம். அவ்வாறு ஒரு நாள் சென்ற போது அங்கிருந்த படையினர் சிலரினால் பலவந்தமாக, கூட்டிச் செல்லப்பட்டு, முகாமிற்கு அருகில் இருந்த, கைவிடப்பட்ட வீட்டிற்குள் வைத்து அந்தப்பெண்ணை பாலியல் வல்லுறவு மேற்கொண்டு, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த பாழ் அடைந்த கிணற்றினுள் வீசிவிட்டுச் சென்றுள்ளார்கள்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண், அவ்வ+ர் சாதாரண கிராமவாசி என அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களுடனும், அவ்வ+ர் பிரதேச மகளிடமும் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. ஆனால் இந்தச் செய்தியை தேனியில் வேறு விதமாக குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது, அந்தப் பெண் ஒரு புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்லது புலிகள் அமைப்போடு சம்பந்தப்பட்டவர் என்ற தோரணையில் கட்டுரையாளர் எழுதியிருந்தார். அதை தேனி இணையத்தளம் வெளியிட்யிருந்தது.

ஒரு செய்தியை வெளியிடும் போது அதன் நம்பகத் தன்மையை ஆராய்ந்திருக்க வேண்டும். அந்தக் கட்டுரையை வாசிக்கும் போது வேணுமென்றே திரித்து எழுதப்பட்டதாக தெரிகிறது. இதனால் தேனியில் வரும் ஏனைய உண்மையான செய்திகள், கட்டுரைகளும் உண்மைக்குப் புறம்பானதாக எண்ணத்தோன்றும் மனநிலையை உருவாக்கும்.

இதேபோன்று கண்மூடித்தனமாக புலிகளை ஆதரிக்கும் இணையத்தளமான ‘நிதர்சனம்’ ஆதாரமற்ற தகவல்களையும், மாற்றுக் கருத்தாளர்களையும், முற்போக்கு நிந்தனையாளர்களின் நடவடிக்கைகளுக்கு சேறு ப+சும் விதமாகவும், காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்ப்பதே தமது தலையாய கடமையாகவும் எடுத்துகொண்டு செய்திகளை பரப்புவதில் முன்நிற்கின்றார்கள். இவர்களின் கருத்திற்கு மாற்றுக் கருத்துக்கொண்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை புனைந்து வெளியிடுவதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல.

அண்மையில் கொழும்பு தெகிவளையில் சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ் லோகநாதன் பற்றிய செய்தியை வெளியிடும் போது கடைசிப் பத்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்கள். ‘கேதீஸ் தொடர்பான 'அண்டவாளங்களை' வெகுவிரையில் வெளியிடுவோம்’ என்று. கேதீஸ் தொடர்பாக விமர்சனங்கள் இருப்பது வேறு, சேறு ப+சுவது வேறு. விமர்சனங்கள் காழ்ப்புணர்வற்றனவாக இருக்க வேண்டும். கேதீஸ_க்கு ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சினையில் நிறையவே பங்கிருக்கின்றன. அதற்கான அவரின் உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. (25.80.2006 இல் கனடா - வைகறை பத்திரிகையில் அவர் தொடர்பாக கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கின்றது) ஆனால் நிதர்சனம் போன்ற தளங்கள் இம்மாதிரியான செய்திகளை தொடர்ச்சியாக வெளியீடுவார்களானால் அவர்கள் தொர்பான நம்பகத்தன்மையை இழந்து விடுவார்கள்.

செய்தித் தளங்கள் தங்களுக்குரிய உரிமையையும், சுதந்திரத்தையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லாது விடின், மக்கள் ஊடகங்களாக இவைகள் வலம் வரமுடியாதவைகளாகவே இருக்கும்.

Saturday, August 26, 2006

ஆயுதக் கொள்வனவு முயற்சியில் தமிழ் கனேடியர்கள் கைது!

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பிரிவினரால் (F.B.I) கைது செய்யப்பட்ட எட்டு தமிழர்கள் அமெரிக்க நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு போர்த் தளபாட கொள்வனவில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இராணுவ உபகரணங்கள் கொள்வனவு தொலைத் தொடர்பு மற்றும் வேறு தொழில்நுட்ப உபகரண கொள்வனவு, நிதி சேகரிப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களூடாக பணத்தை அனுப்பிவைத்தல், அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முற்பட்டது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த சதாஜன் சரத்சந்திரன் (26), சகிலால் சபாரட்ணம் (27), திருத்தணிகன் தணிகாசலம் (37), நடராசா யோகராசா (52), முருகேசு விநாயகமூர்த்தி (57), விஜயசந்தர் பற்பானந்தன் (44), திருக்குமரன் சிவசுப்பிரமணியம் (27) இவர்களோடு தென்னிந்தியாவைச் சேர்ந்த நாச்சிமுத்து சோகிரட்டீஸ்( 54) ஆகியோரே கடந்த 19 ஆம் திகதி F.B.I பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்பது லட்சம் டொலர் முதல் 9 லட்சத்து 37,500 டொலர் வரை முதலில் இவர்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவிருந்ததாகவும், விமான எதிர்ப்பு ஏவுகணையில் ஒன்றைப் பரிசீலிப்பதற்காக எஸ்.ஏ- 18 ரக ஏவுகணை ஒன்றை இவர்களில் ஒருவர் ஓரிடத்திற்குக் கொண்டு சென்றதாகவும் தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளிருந்ததுடன் அமெரிக்க அதிகாரிகளுக்குப் பெருமளவு லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் புலிகளுக்கான தடையை நீக்கவும் முயற்சித்து வந்ததாகவும் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார். இவர்களது கைது சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது, கைது செய்யப்பட்வர்களுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் நாம் செயற்படும் முறை இதுவல்ல என்றும் இப்படி ஒரு காரியத்தை நாம் ஒருபோதும் செய்தது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சதாஜன் சரத்சந்திரன், சகிலால் சபாரட்ணம்இ திருத்தணிகன் தணிகாசலம் ஆகிய மூவரும் Waterloo பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்களாவர். சதாஜன் சரத்சந்திரன் கனேடிய தமிழ் மாணவர் அமைப்புக்கு (Canadian Tamil Students Association) சிலகாலம் தலைவராக இருந்ததுடன்இ 2004ம் ஆண்டு புரட்டாதி மாதம் ரொரன்ரோவில் நடாத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்சியின் ஏற்பாட்டாராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது பொங்கு தமிழ் நிகழ்வு தொடர்பாக இவரது பேட்டி வைகறை பத்திரிகையில் வெளியாகியது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குமாகச் சேர்த்து அனைவருக்கும் 30 வருடங்களுக்கும் குறையாத தண்டனை வழங்கப்படுமெனவும் தெரியவருகிறது.

இந்த விவகாரத்தின் தொடர்சியாக மேலும் மூன்று தமிழ் கனேடிய இளைஞர்கள் ரொறன்ரோவில் RCMP பொலிசாரால் கைது செய்யப்படடுள்ளனர். Waterloo பல்கலைக்கழக மாணவரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா (26) கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் இதே பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பிரதீபன் நடராஜா (30) மற்றும் ரமணன் மயில்வாகணம் (29) ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். ரமணன் மயில்வாகணம் University of Waterloo Tamil Students Associationன் உதவித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான விசாரணைக்காக பிரம்ரன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொலிசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இவர்களது கைது தொடர்பாக கனேடியன் தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் Puபாலபிள்ளை கருத்துத் தெரிவிக்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழ்சமூக அமைப்புகள் பலவற்றில் இணைந்து செயற்பட்டவர்கள் என்றும், எவரும இப்பாடியான அமைப்புக்களில் இணைந்து செயற்படமுடியும் என்றும், என்னைப் பொறுத்தவரையில் நான் உறுதியாக நம்புகின்றேன், அவர்கள் “Loose cannons..” (Dangerously uncontrollable people) போல் செயற்பட்டுள்ளார்கள் எனத்தெரிவித்துள்ளார்.
RCMP பொலிசார் இக் கைது நடவடிக்கை பற்றிக் குறிப்பிடுகையில் FBI யினரும் RCMP யினர் குறிப்பாக RCMP National security program and the Integrated National Security Enforcement Team (INSET) in Toronto மற்றும் அமெரிக்க சட்ட அமூலாக்கப் பிரிவினர் ஆகியோரின் ஒருங்கிணைக்கப்டட்ட நடவடிக்கையின் காரணமாக விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட பலர் மீது அமெரிக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

இக்கைதுகள் தொடர்பாக கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Stockwell Day நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், மேற்படி கைதுகள்இ தகுந்த சமயத்தில்; தமது அரசு எடுத்த நடவடிக்கையினை பட்டவர்தனமாக வெளிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் கடந்த ஏப்பிரல் மாதம்இ எமது மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக விடுதலைப்புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்பது என்ற காததிரமான முடிவினை எடுத்தோம். மேற்படி கைதுகள் பயங்கரவாத அச்சம் தொடர்பான எமது அரசின் கடும் கண்காணிப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நன்றி: வைகறை (25.08.2006)

கனேடிய தமிழ் ஊடகங்களும், தமிழர்களும்!

கனடாவில் பத்திற்கும் மேற்பட்ட வாராந்த தமிழ்ப்பத்திரிகைள் வெளிவருகின்றன. நிறையப் பக்கங்களுடன் வெளிவரும் இப் பத்திரிகைகளில் விளம்பரங்களே அதிகமாக காணப்படுகனிறன.

‘விளம்பரங்களே பத்திரிகையின் அச்சானி’ இது சான்றோர் வாக்கு. ஆனால் இங்கே விளம்பரங்களுக்கே பத்திரிகை என்று ஆகிப்போற்று. ஒரு பத்திரிகையின் தரமும், போக்கும் அச்சமூகத்தை பிரதிபலிக்கும் காரணிகளில் ஒன்று. ஆனால் எந்தப் பத்திரிகையும் அதை கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை.

சில காலமாக என்னுடைய அவதானிப்பின் படி, பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளும், கட்டுரைகளும், அல்லது ஏனைய படைப்புகளும் ஒரு சார்பானதாகவே இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது வெளியிடும் செய்திகளிலோ அல்லது கட்டுரைகளிலோ எந்தளவிற்கு நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை போன்றவற்றை யாரும் கருத்தில் கொள்வதில்லை. அல்லது அது பற்றி சிலாகிப்தும் இல்;லை. தமது சார்புநிலைகளுக்கு ஏற்றமாதிரி செய்திகள் வெளிவரவேண்டும் என்பதே இங்கு வாழும் பெரும்பாலானவர்களின் கணிப்பு அல்லது விருப்பம்.
இதை எழுதுவற்கு தூண்டியதன் காரணம் என்னவென்றால், அண்மையில் இலங்கையில் நடபெற்றுக் கொண்டிருக்கின்ற போர்ச் சம்பங்கள் தொடர்பாக இலண்டன் பி.பி.சி. பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நேரடித்தகவல்களாகவும், நேர்காணல் ஊடாகவும் தனது சேவையை நடத்திக்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையனிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டபோது அவர் இரத்தினச்சுருக்கமாக சில பதில்களை தெரிவித்திருந்தார். அது பலரின் கவனத்தையும் பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

இதே போன்று இன்னொரு முறை அவருடனான நேர்காணலின்போது அதாவது மூதூர் யுத்தமும், முஸ்லீம் மக்கள் இடம்பெயர்வும் தொடர்பானது. அப்போது இளம்திரையனின் பதிலில் கொஞ்சம் நெருடல் காணப்பட்டது. இதைக்கேட்டுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்கள் (ஈழத்தில் பி.பி.சியின் சேவையை 99வீதமானவர்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை என்பது எனது கருத்து) பொங்கி எழுந்துவிட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இளந்திரையனை சங்கடத்தில் மாட்டும் கேள்விகளை பி.பி.சியினர் கேட்கக் கூடாது என்பது தான். அல்லது இலங்கை இராணுவப்பேச்சாளரிடம் இவ்வாறு பி.பி.சியினர் நடந்துகொள்வார்களா? என்பதே. இம்மாதிரியான மனநிலையிலேயே இன்று அனேகமான புலம்பெயர் மக்கள் வாழ்கின்றார்கள். இவ்வகையினரின் மனநிலையை மேலும் மோசமாக்க புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும் தனியார் வானொலிகள், பத்திரிகைகள் வலுவ+ட்டுகின்றன.

23ம் புலிகேசியில் வரும் வசம்போல் சொல் புத்தி, சுயபுத்தி. புலம்பெயர் மக்கள் சொல் புத்தியாகவே இருக்கிறார்கள். உய்த்துணரும் பழக்கத்தை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதில்லை.

தற்போது பி.பி.சியை இத்தமிழர்கள் கேட்கக் கூடாது, புறம் தள்ள வேண்டும் என்று புலம்புகிறார்கள்.

‘சந்திரனைப் பார்த்து நாய் வவ் வவ் வவ்.... செய்தா யாருக்கு நட்டம்?

Sunday, August 20, 2006

அமைதிப்பேரணில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேடியவை!

கடந்த வாரம் கொழும்பில் ‘தேசிய போருக்கு எதிரானவர்கள’ நடடித்திய அமைதிப்பேரணியில் குறுக்கிட்ட ‘தேசிய பிக்கு முன்னணியினர்’ கிளிநொச்சிக்குப் போய் அமைதி குறித்து பேசுங்கள் என்று போருக்கு எதிரானவர்களிடம் வாதிட்டபோது இருசாரார்களுக்கிடையிலும் வாக்குவாதமும், மோதலும் மூண்டு, பிக்குமார்கள் பரஸ்பரம் அவர்களின் அங்கிகளை (உடை) பிடித்து இழுபட்டதை இணையத்தள புகைப்படங்களிலும், ஏனைய செய்திகளிலும் காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பாக தமிழர் தரப்பு செய்திகளில் மிகைப்படுத்தி, அவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அளவிற்கு மீறிய நகைப்புடன் பார்க்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

கொழும்பு நகரில் பல அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலா மக்கள் சிங்கள இனத்தவர்கள். அவர்களோடு சில சிங்கள அரசியல்வாதிகளும், ஏனைய சமாதான விரும்பிகளும் இலங்கையில் போர் மூண்ட காலங்களில் இருந்து இன்று வரை அவ்வப்போது போருக்கெதிராக தமது எதிர்ப்பினையும், ஆர்பாட்ட ஊர்வலங்களையும், நடத்தியும், போரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு, நாட்டில் வாழும் மூவின மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போரை முடிவிற்கு கொண்டுவரும் படியும் அறிக்கைள் அனுப்புவது வழக்கம்.

அது போன்றே இம்முறையும் ஒரு நிகழ்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய இலங்கையின் சூழலில் யுத்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஜனநாயக செயற்பாட்டிற்கும், பாரிய எதிர்ப்புக் கிளம்பும் சூழல் கொழும்பில் காணப்படுவதற்கு அங்கு மாறியிருக்கும் அரசியலே காரணமாக இருக்கின்றது.

இந்த எதிர்ப்புக் குழுவினரை நெறிப்படுத்தி, வழிநடத்த சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருக்கும், ஜே.வி.பி. சிஹெல உருமைய, பிக்குகள் சங்கம் .... போன்ற அமைப்புகளும், அவை சார்ந்த ஏனைய அமைப்புகளும் பின்னணியில் இருப்பதும் முக்கிய காரணம்.

ஆனால் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையிலும் சமாதான விரும்பிகள் ‘யுத்தத்திற்கெதிரான போராட்டங்களில் ஈடுபடுவது மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம். இவ்வாறானவர்களின் பல வெளிநடவடிக்கைகளினால் தான் பல சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் தொடர்பாகவும், தமிழினப்பிரச்சனை தொடர்பாகவும் அவர்கள்அறியக்கூடியதாக இருக்கின்றது என்பதை பல தமிழர்களுக்கு தெரிவதில்லை. அவ்வாறு அவர்கள் அறியும்போது, தமிழர்கள் தொடர்பாக அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்த எண்ணக்கருத்தில் மாற்றம் நிகழ்வதற்கான சூழல் உருவாகும்.

அதே போன்று கொழும்பிலோ அல்லது ஏனைய சிங்கள புறநகர் பகுதிகளிலோ ஒரு மனிதக் குண்டு வெடிப்பினால் அல்லது வேறு வகையான குண்டு வெடிப்பினால் பெருந்தொகையான சிங்கள பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, தமிழர் பிரதேங்களினல் எதிர்ப்புத் தெரிவித்த வரலாறு இருந்திருக்கின்றதா? அல்லது ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? என்பதை நாம் நம்மைப்பார்த்து கேட்டவேண்டிய கேள்வி. அல்லது அவ்வாறான ஒரு ஏற்பாட்டை தமிழர்கள் செய்வதில்லை.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் நிறையவே கற்றுக்கொள்ளவும், எம்மை மாற்றிக் கொள்ளவும் வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

போர்க் களத்தில் நடப்பது என்ன?

இன்று இலங்கையின் நிலவரம் என்ன? என்றால் போர்க்ளத்தில் நிற்பவர்களைத் தவிர யாருக்கும் குறைந்த பட்ச உண்மை நிலை தெரியாது. புலிகளும், அரசபடைகளுக்கும் இடையில் எழுதுமட்டுவன் பகுதியில் உக்கிரமான சண்டை நடைபெறுகின்றது என்பது உண்மைதான். ஆனால் யுத்தம் புரிபவர்கள் சார்பாக பரஸ்பரம் வெளியிடும் இழப்புகளின் எண்ணிக்கைதான் மிக முரண்பாடான செய்தியாக இருக்கின்றன.

இருசாராரின் எண்ணிக்கைகளையும் கூட்டிக் கழித்து நமது பொது அறிவைக்கொண்டு ஒரு முடிவிற்கு வருவதில் 80வீதமான உண்மையிருக்கும். போர் நடக்கும் சூழலில் இருசாராரும் இழப்புகளின் உண்மைநிலையை வெளியிடமாட்டார்கள். அது அவர்களின் போர்நடவடிக்கைகளைப்பாதிக்கும். அந்த வகையில் இன்றைய நிலையை ஆராய்ந்தால்,
உண்மையில் புலிகள் முகமாலையில் இருந்து எழுதுமட்டுவன் வரை சென்றுள்ளார்கள், கனிசமான இழப்புகளைச் சந்தித்துக்கொண்டு. அதே நேரம் இன்று வரை அவர்களால் மேல் நோக்கி நகரமுடியாதவாறு இரு பகுதியினரும் சண்பிடிக்கின்றார்கள். அரச இராணுவமும் என்ன விலை கொடுத்தாவது புலிகளை மேலும் முன்னேற விடாமல் உக்கிராமாக சண்டைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். புலிகளும் அவ்வாறே உக்கிரமான மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

யாழ் பலாலி விமானத்தளத்தைப் பொறுத்தவரை, புலிகளி;ன் தொடர்ச்;சியான ஆட்லெறி வீச்சினால் அதன் பல பகுதிகள் சேதமடைந்திருப்பதாக இராணுவமே ஒத்துக்கொண்டிருக்கின்றது. பலாலியை அண்டி வாழும் மக்களின் கருத்துக்களும் அதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இது புலிகளைப் பொறுத்தவரை சாதகமான விடயம் தான்.

இது இவ்வாறிருக்க, யாழ்நிகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் பல இளைஞர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும், காணமல் போவதும் பரவலாக நடந்துகொண்டிருக்கின்றது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதால் இராணுவத்தினருக்கும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுததாரிகளுக்கும் நிறையவே தொர்பிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு இலங்கையில், இந்திய இராணுவத்தினர் இருந்த காலங்களில் முகமூடி அணிந்து, தலையாட்டிக் காட்டிக்கொடுத்த மாதிரி, தற்போது இலங்கை இராணுவத்தினரும் பரவலாக தலையாட்டியை வைத்து பல இளைஞர், யுவதிகளை கைது செய்துவருகிறார்கள். பொருட்களின் விலையும் திடீர் திடீர் என அதிகரித்திருப்பதாக அறிய முடிகின்றது.

கடந்த வாரம் புலிகளின் தந்திரோபாய இராணுவ நடவடிக்கையாக, புலிகளின் ஒரு பிரிவினர் கடல் மார்க்கமாக பல வள்ளங்களில் கிளாலியூடாக சென்று தரையிறங்கி அரச இராணுவத்திற்கு எதிரான தாக்குதலை நடத்த மேற்கொண்ட திட்டம் வெற்றியளிக்காமல் கணிசமான போராளிகளை இழந்தும் அவர்களின் நடவடிக்கைகளை கைவிட்டு திரும்பிய சம்பவமும் நடைபெற்றது. இறந்த போராளிகளின் உடல்களை அரச இராணுவத்தினர் கைப்பற்றி இருந்தார்கள் என்பதும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதே போல் இராணுவத்தினர் தமது படைகளின் இறந்த, காயமடைந்த உடல்களை அப்புறப்படுத்துவதை தம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

எது எப்படியோ, கொழும்பிலும், நகரை அண்டிய பகுதிகளிலும் உள்ள பொது மருத்துவமனைகளில் காயமடைந்த இராணுவத்தினருக்காக முன்கூட்டியே இடங்களை ஒதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாசமறுப்பான்

நாசமறுப்பான்

Monday, August 14, 2006

முல்லைப் படுகொலை யார் பொறுப்பு....?

இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலுக்குள்ளான முல்லை, செஞ்சோலைக் கட்டிடத்தில் 61க்கும் ;அதிகமான மாணவிகள் கொலைசெய்யப்பட்டும் 129க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கும் இச்செயலை எந்த மனித சமூகமும் கண்டிக்காமல் இருக்கமுடியாது.

இவ்வாறான அசிங்கமான அடாவடித்தனத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இலங்கை இராணுவத்தினரின், தமிழர்கள் மீதான தாக்குதல்கள் சொல்லில் அடங்காதவை. அதுவும் தற்போதைய ராஜபக்ஷ அரசானது தமிழர்கள் மீது மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளை விரிவு படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

ஆனால் இவ்வாறான மோசமான விளைவுகளுக்கு புலிப்படையினரும் முக்கிய காரணிகளில் ஒன்று என்றால் அதுவும் தவறில்லை.

அண்மைக்காலமாக புலிப்டையினர்; தமது பிராந்தியங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு இராணுவப்பயிற்சிகளை பகிரங்கமாக வழங்கிவருகின்றனர். அதற்கு அவர்கள் ‘மக்கள் படை’ என்றும் பெயர் சூட்டியுள்ளார்கள். இம் மக்கள் படை, இலங்கை இராணுவத்தினரின் நடவடிக்கைகளில் இருந்து தங்களை தற்பாதுகாத்துக்கொள்வதற்காகவே இவ்வாறான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது என்று புலிகள் தரப்பில் சொல்லப்படுகின்றது.

நேற்று செஞ்சோலையிலும் அவ்வாறான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் மீதே இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் புலிகள் இதை மறுக்கின்றார்கள்.

முல்லையில் இருந்து கிடைத்த பக்கசார்பற்ற தகவல்களின் படி அண்மைக்காலமாக இம் மாணவிகள் பயிற்சிக்கென்று சென்று வருவது வழக்கமான ஒன்று என்றும், இவ்வாறான பயிற்சிகளுக்கு செல்லாவிட்டால், உயர்தரப்பரீட்சை எழுத அனுமதிக்கப்பட மாடார்கள் என்ற ஒரு தகவலும் தெரியவந்துள்ளது. (புலிகள் மேல் வேணுமென்று பழிபோடும் நோக்கமல்ல) இந்த இடத்தில், ‘அங்கு கொல்லப்பட்டவர்கள் அருகில் ஆயுதங்கள் எதுவும் இல்லையே என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவாக எழும்.’ அங்கு அன்று ஆயுதங்களுடனான பயிற்சி நடைபெறவில்லை. மாறாக அதற்கு முன்னேற்பாடன வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

புலிகளின் பகுதிகளில் இருந்து முறையாக ஒழுங்கமைக்கபட்ட தகவல் இராணுவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் விளைவே இந்த அநியாயப் படுகொலைகள். புலிகளின் பிராந்தியத்தில் இருந்து இராணுவத்தினருக்கு தகவல் போகுமளவிற்கு புலிகளின் அடைப்புகளில் ஓட்டை இருப்பதையே இது காட்டுகிறது.

புலிகளைப் பொறுத்தவரையில் இவ்வாறான கொலைகளை புலிகள் தங்களுக்கு ஆதாயமாகவே பார்ப்பார்கள.; இது வரலாறு. மக்கள் இலகுவாக இராணுவமயப்படுத்தப்படுவதற்கு இவவாறனா சம்பவங்களே ஆயுதங்களாக இருக்கின்றன.

தற்போதைக்கு, மாவிலாறு தண்ணீர்ப்பிரச்சினை எப்படியெல்லாம் அரசியலாக்கப்படுகின்றது!