Monday, August 14, 2006

முல்லைப் படுகொலை யார் பொறுப்பு....?

இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலுக்குள்ளான முல்லை, செஞ்சோலைக் கட்டிடத்தில் 61க்கும் ;அதிகமான மாணவிகள் கொலைசெய்யப்பட்டும் 129க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கும் இச்செயலை எந்த மனித சமூகமும் கண்டிக்காமல் இருக்கமுடியாது.

இவ்வாறான அசிங்கமான அடாவடித்தனத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இலங்கை இராணுவத்தினரின், தமிழர்கள் மீதான தாக்குதல்கள் சொல்லில் அடங்காதவை. அதுவும் தற்போதைய ராஜபக்ஷ அரசானது தமிழர்கள் மீது மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளை விரிவு படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

ஆனால் இவ்வாறான மோசமான விளைவுகளுக்கு புலிப்படையினரும் முக்கிய காரணிகளில் ஒன்று என்றால் அதுவும் தவறில்லை.

அண்மைக்காலமாக புலிப்டையினர்; தமது பிராந்தியங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு இராணுவப்பயிற்சிகளை பகிரங்கமாக வழங்கிவருகின்றனர். அதற்கு அவர்கள் ‘மக்கள் படை’ என்றும் பெயர் சூட்டியுள்ளார்கள். இம் மக்கள் படை, இலங்கை இராணுவத்தினரின் நடவடிக்கைகளில் இருந்து தங்களை தற்பாதுகாத்துக்கொள்வதற்காகவே இவ்வாறான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது என்று புலிகள் தரப்பில் சொல்லப்படுகின்றது.

நேற்று செஞ்சோலையிலும் அவ்வாறான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் மீதே இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் புலிகள் இதை மறுக்கின்றார்கள்.

முல்லையில் இருந்து கிடைத்த பக்கசார்பற்ற தகவல்களின் படி அண்மைக்காலமாக இம் மாணவிகள் பயிற்சிக்கென்று சென்று வருவது வழக்கமான ஒன்று என்றும், இவ்வாறான பயிற்சிகளுக்கு செல்லாவிட்டால், உயர்தரப்பரீட்சை எழுத அனுமதிக்கப்பட மாடார்கள் என்ற ஒரு தகவலும் தெரியவந்துள்ளது. (புலிகள் மேல் வேணுமென்று பழிபோடும் நோக்கமல்ல) இந்த இடத்தில், ‘அங்கு கொல்லப்பட்டவர்கள் அருகில் ஆயுதங்கள் எதுவும் இல்லையே என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவாக எழும்.’ அங்கு அன்று ஆயுதங்களுடனான பயிற்சி நடைபெறவில்லை. மாறாக அதற்கு முன்னேற்பாடன வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

புலிகளின் பகுதிகளில் இருந்து முறையாக ஒழுங்கமைக்கபட்ட தகவல் இராணுவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் விளைவே இந்த அநியாயப் படுகொலைகள். புலிகளின் பிராந்தியத்தில் இருந்து இராணுவத்தினருக்கு தகவல் போகுமளவிற்கு புலிகளின் அடைப்புகளில் ஓட்டை இருப்பதையே இது காட்டுகிறது.

புலிகளைப் பொறுத்தவரையில் இவ்வாறான கொலைகளை புலிகள் தங்களுக்கு ஆதாயமாகவே பார்ப்பார்கள.; இது வரலாறு. மக்கள் இலகுவாக இராணுவமயப்படுத்தப்படுவதற்கு இவவாறனா சம்பவங்களே ஆயுதங்களாக இருக்கின்றன.

தற்போதைக்கு, மாவிலாறு தண்ணீர்ப்பிரச்சினை எப்படியெல்லாம் அரசியலாக்கப்படுகின்றது!

7 comments:

Anonymous said...

dai srirangan ennda unnkuu innoruu perr

ஈழநாதன்(Eelanathan) said...

கொழும்பில் தாக்குதல்களை எதிர்கொள்வது எப்படி என்று விசாகா பாலிகா சிங்கள மகாவித்தியாலத்தில் மாணவிகளுக்கு சிறீலங்கா இராணுவத்தால் பயிற்சி கொடுக்கப்பட்டது.அவர்களைக் கொல்லலாமா சார்?சிங்கள எல்லைக் கிராமங்களில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதோடு இலகு ரக ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன அவர்களைப் போட்டுத்தள்ளலாமா சார்.

ஆயுதப் பயிற்சியோ முதலுதவிப் பயிற்சியோ எம் மக்களைக் கொல்லும் உரிமையை எவன் கொடுத்தான் சிங்களவனுக்கு?

Anonymous said...

Please read the news item on this link it clearly gives details of the type of training given, this leadership and first aid training was advertised on the local news pappers, hence it is not a secret.Before writing these kind of blog articles please check your facts first.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19236
//The Director of Tamileelam Educational Board, V. Ilankumaran, in an interview to TamilNet Monday said that the schoolgirls killed and injured in Monday's Kfir attack were participants in a 10-day residential "Leadership, Self-Awareness and First Aid workshop." More than 400 G.C.E. A/L students from 18 different schools in Kilinochchi, Mullaithivu, and Oddusuddan Educational Zones, and selected girls from other educational organisations took part in the annual programme, Mr. Ilankumaran said. According to the timetable of the course, 7:00 a.m. on Monday, the time the air-strike took place, was the time of morning-assembly. //

Anonymous said...

The pictures attached to the articles circulating the internet about the subject bombing bring doubt to anyone’s mind when closely scrutinized them.

According to the article associated to these pictures the victims were from a bomb blast.

According to the article the bombs were dropped from a Kfir Jet. These types of bombs cause massive explosions and do quite a bit of damage unlike claymore mines.

The average bomb is roughly 250 kgs of high explosives with quite heavy fragmentation, big enough to bring down a two storied building.(eg. current Lebanon bombings)

However the injuries are not consistent with injuries incurred in a bomb blast.
Upon close examination the injuries appear to be limited to head wounds which appear to be gun shot wounds from a small caliber weapon at close range.
According to the article the victims (who were under-aged girls) were attending a first aid training session at a children's home.

Taking into account the past behavior of the LTTE, where they have grossly mislead the international community with false news and propaganda, one may arrive at the following conclusion.

The current high attrition rate of the LTTE has pushed them to forcibly enlist new recruits to LTTE ranks. This has led to the LTTE luring school children to attend these so called first aid camps and try to forcibly enlist them into LTTE ranks. For some reason these girls must have been shot in the head for refusing to join, by a rampaging LTTE carder or gang or these may be LTTE girls who tried to escape from the LTTE's grasp and surrender to the local authorities, hense the execution style wounds and the opportunist LTTE media has linked this with the recent air bombing of the LTTE training camp.

The truth may not be what is written here or what others write.

In these types of incidences the truth is almost always left unrevealed.

However the ghosts of these young girls will haunt the perpetrators' lives as long as they exist in this universe.

Basic Forensics

Ramesh said...

யாரையும் யாருக்கும் கொல்லும் உரிமை கிடையாது. நானும் அவ்வாறு சொல்லவில்லை. இந்த மாணவிகள் கொலை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வந்துகொண்டிருந்தன. அந்த வகையில் நான் குறிப்பிட்ட செய்தியும் அங்கு இருந்து வந்ததுதான். இதில் எது உண்மையாக இருந்தாலும் நான் ஆரம்பத்தில் சொன்னது போல இந்த மிலேச்சத்தனமான கொலை கண்டிக்கபடவேண்டியவையே. ஆனால் இவ்வாறன கொலைகள் நடைபெறுவதற்கு ஏதோ ஒரு வகையில் புலிகளும் உடைந்தையாக இருக்கின்றார்கள் என்பது எனது செய்தி.

Ramesh said...

ஐயா ஈழநாதன் மற்றும் நாரதர் வணக்கமுங்க,

இந்த பள்ளி மாணவிகளின் கொலைகளை நாம் அரசியல் ஆக்க வேண்டியதில்லை. உங்கள் கருத்துக்களில் உங்களின் அரசியல் சார்புத்தன்மையோடுதான் விளக்கம் கொடுக்கின்றீர்கள். யாரும் யாருக்கும் பயிற்சி கொடுக்கட்டும். ஒரு யுத்த சூழ்நிலையில் ஏற்பட்டால் அதில் இருந்து மக்கள் தங்களைப்பாதுகாப்பதற்காக அவர்கள் தற்பாதுகாப்பு அறிவைப் பெற்றிப்பது முக்கியமான ஒன்று.

இங்கே நாரதர் குறிப்பிட்டது போல அவரின் செய்தி மூலங்கள் எங்கிருந்து வருகின்றது என்று பாருங்கள் புலிகள் சார்பான செய்தித் தளங்களில் மட்டும் இருந்து வரும் ஒரு பக்க செய்தியை அறிவதோடு முடிவிற்கு வருவது முடிவாக மாட்டாது. பக்கசார்பற்ற செய்திகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஈழநாதன் ஐயா, புலிகளும், அனேகமான தமிழர்களும் சந்தோசப்படும் செய்திகளாக மட்டும் வரவேண்டும் என்று உங்கள் மனம் நினைக்கலாம் ஆனால் உலகம் அப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது நியாயமா?

யுனிசெப் அம்மையார் பி.பி.சிக்கு அளித்த பேட்டியைக் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு நான் சொல்லுவதை விட இந்த விடையம் நன்றாக புரிந்திருக்கும்.

அவ சொல்லுறா ‘நான் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும், அங்கு நின்றவர்களிடமும் இருந்து தகவல்களைப் பெற்றேன். ஆனால் என்னால் ஒரு நிறைவான முடிவிற்கு வரமுடியாமல் இருக்கின்றது. காரணம் அவர்கள் ஏன் அங்கு சென்றார்கள், யார் அவர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள், என்ன மாதிரியான பயிற்சி வழங்கப்பட்டது போன்ற தவல்களை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கின்றது. இருந்தாலும் இவர்கள் பாடசாலை மாணவிகள் என்று மட்டும் நிரூபணமாக சொல்லமுடியும்’ என்றார். ஐயா, அந்த அம்மையாருக்கே, அதுவும் நேரில் சம்பந்தப்படவர்களோடு கதைத்தும், பார்த்தும் புரிந்துகொள்ள கடினமாக இருக்கின்றது என்றால் இதற்கு மேல் நான் என்ன சொல்ல?

புலிகளை அம்பலப்படுத்துவது எனது நோகம் அல்ல. எனக்கு அந்த எண்ணமும் கிடையாது. அனால் புலிகளின் பலவீனங்களால் புலிகளே தங்களை காட்டிக் கொடுத்து விடுகிறார்கள். புலிகள் வேற அரசியல் நோக்கங்களுக்காக கிராமவாசிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவதை படம் காட்ட வெளிக்கிட்டதால் இப்போ, இலங்கை அரசாங்கம் எடுத்ததெற்கெல்லாம் அதை துரும்பாக பயன்படுத்துகின்றதே அது தான் எனது ஆதங்கம். இவற்றை வெளி உலகம் எப்படிப்பார்க்கும் என்பதை புலி ஆதரவாளர்களான நீங்கள் புலிகளுக்கு உணர்த்துங்கள். அது நீங்கள் புலிகளுக்கு செய்யும் சரியான தொண்டு. அதை விடுத்து பி.பி.சிக்காரனோடும், ஏனைய மாற்றுக் கருத்தாளர்களோடும் பாய்ந்து விழுவது உசிதமல்ல.