Sunday, August 20, 2006

போர்க் களத்தில் நடப்பது என்ன?

இன்று இலங்கையின் நிலவரம் என்ன? என்றால் போர்க்ளத்தில் நிற்பவர்களைத் தவிர யாருக்கும் குறைந்த பட்ச உண்மை நிலை தெரியாது. புலிகளும், அரசபடைகளுக்கும் இடையில் எழுதுமட்டுவன் பகுதியில் உக்கிரமான சண்டை நடைபெறுகின்றது என்பது உண்மைதான். ஆனால் யுத்தம் புரிபவர்கள் சார்பாக பரஸ்பரம் வெளியிடும் இழப்புகளின் எண்ணிக்கைதான் மிக முரண்பாடான செய்தியாக இருக்கின்றன.

இருசாராரின் எண்ணிக்கைகளையும் கூட்டிக் கழித்து நமது பொது அறிவைக்கொண்டு ஒரு முடிவிற்கு வருவதில் 80வீதமான உண்மையிருக்கும். போர் நடக்கும் சூழலில் இருசாராரும் இழப்புகளின் உண்மைநிலையை வெளியிடமாட்டார்கள். அது அவர்களின் போர்நடவடிக்கைகளைப்பாதிக்கும். அந்த வகையில் இன்றைய நிலையை ஆராய்ந்தால்,
உண்மையில் புலிகள் முகமாலையில் இருந்து எழுதுமட்டுவன் வரை சென்றுள்ளார்கள், கனிசமான இழப்புகளைச் சந்தித்துக்கொண்டு. அதே நேரம் இன்று வரை அவர்களால் மேல் நோக்கி நகரமுடியாதவாறு இரு பகுதியினரும் சண்பிடிக்கின்றார்கள். அரச இராணுவமும் என்ன விலை கொடுத்தாவது புலிகளை மேலும் முன்னேற விடாமல் உக்கிராமாக சண்டைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். புலிகளும் அவ்வாறே உக்கிரமான மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

யாழ் பலாலி விமானத்தளத்தைப் பொறுத்தவரை, புலிகளி;ன் தொடர்ச்;சியான ஆட்லெறி வீச்சினால் அதன் பல பகுதிகள் சேதமடைந்திருப்பதாக இராணுவமே ஒத்துக்கொண்டிருக்கின்றது. பலாலியை அண்டி வாழும் மக்களின் கருத்துக்களும் அதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இது புலிகளைப் பொறுத்தவரை சாதகமான விடயம் தான்.

இது இவ்வாறிருக்க, யாழ்நிகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் பல இளைஞர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும், காணமல் போவதும் பரவலாக நடந்துகொண்டிருக்கின்றது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதால் இராணுவத்தினருக்கும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுததாரிகளுக்கும் நிறையவே தொர்பிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு இலங்கையில், இந்திய இராணுவத்தினர் இருந்த காலங்களில் முகமூடி அணிந்து, தலையாட்டிக் காட்டிக்கொடுத்த மாதிரி, தற்போது இலங்கை இராணுவத்தினரும் பரவலாக தலையாட்டியை வைத்து பல இளைஞர், யுவதிகளை கைது செய்துவருகிறார்கள். பொருட்களின் விலையும் திடீர் திடீர் என அதிகரித்திருப்பதாக அறிய முடிகின்றது.

கடந்த வாரம் புலிகளின் தந்திரோபாய இராணுவ நடவடிக்கையாக, புலிகளின் ஒரு பிரிவினர் கடல் மார்க்கமாக பல வள்ளங்களில் கிளாலியூடாக சென்று தரையிறங்கி அரச இராணுவத்திற்கு எதிரான தாக்குதலை நடத்த மேற்கொண்ட திட்டம் வெற்றியளிக்காமல் கணிசமான போராளிகளை இழந்தும் அவர்களின் நடவடிக்கைகளை கைவிட்டு திரும்பிய சம்பவமும் நடைபெற்றது. இறந்த போராளிகளின் உடல்களை அரச இராணுவத்தினர் கைப்பற்றி இருந்தார்கள் என்பதும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதே போல் இராணுவத்தினர் தமது படைகளின் இறந்த, காயமடைந்த உடல்களை அப்புறப்படுத்துவதை தம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

எது எப்படியோ, கொழும்பிலும், நகரை அண்டிய பகுதிகளிலும் உள்ள பொது மருத்துவமனைகளில் காயமடைந்த இராணுவத்தினருக்காக முன்கூட்டியே இடங்களை ஒதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 comments:

வசந்தன்(Vasanthan) said...

தகவல்களுக்கு நன்றி.

Anonymous said...

"உண்மையில் புலிகள் முகமாலையில் இருந்து எழுதுமட்டுவன் வரை சென்றுள்ளார்கள், கனிசமான இழப்புகளைச் சந்தித்துக்கொண்டு."

லாஜிக் உதைக்குதே, இழப்புகளை சந்தித்திருந்தால் பின்னோக்கி அல்லவா எந்த படையும் நகரும், என்ன ஞாயிற்றிக்கிழமை மப்பா?

Anonymous said...

எல்லவற்றையும் தெளிவாகச் சொல்கிறீஇர்கள் ஆனால்
"...இறந்த போராளிகளின் உடல்களை அரச இராணுவத்தினர் கைப்பற்றி இருந்தார்கள் என்பதும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ..." என்கிறீர்கள்.
ஏன் தேனீ, நெருப்பு வெளியிட்ட படங்கள் பழைய (10 வருடட்துக்கு முந்திய) மணலாறு தாக்குதல் படங்கள் என்ற உண்மை ஒத்துக்கொள்ளவேண்டி வரும் என்றோ??????

Anonymous said...

"...லாஜிக் உதைக்குதே, இழப்புகளை சந்தித்திருந்தால் பின்னோக்கி அல்லவா எந்த படையும் நகரும், என்ன ஞாயிற்றிக்கிழமை மப்பா?..."

எந்த லொஜிக்? யுத்தத்தில் இழப்புடன் பின்வாங்குவதும், பலத்த இழப்புடன் முன்னேறுவதும் சாதாரணம் தான்! வேண்டுமென்றால் உலகயுத்தங்களின் சரித்திரத்தைப் புரட்டவும். இரண்டாம் உலகயுத்தத்தில் வெண்ற அமெரிக்க/ரஷ்ய படைகளுக்கு ஏற்படாத இழப்பா? இல்லை வியட்நாமில் 'வியற் கொங்' இற்கு ஏற்படாத இழப்பா? ஆனால் வெண்றது யார்? சிலருக்கி ஞாயிற்றுக்கிழமை தான் 'மப்பு' ஆனால் பலருக்கு எல்லாக்கிழமைகளிலும் புலி-எதிர்ப்பு 'மப்பு' !!!!!!!!

Anonymous said...

hooooooooooo