Sunday, August 20, 2006

அமைதிப்பேரணில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேடியவை!

கடந்த வாரம் கொழும்பில் ‘தேசிய போருக்கு எதிரானவர்கள’ நடடித்திய அமைதிப்பேரணியில் குறுக்கிட்ட ‘தேசிய பிக்கு முன்னணியினர்’ கிளிநொச்சிக்குப் போய் அமைதி குறித்து பேசுங்கள் என்று போருக்கு எதிரானவர்களிடம் வாதிட்டபோது இருசாரார்களுக்கிடையிலும் வாக்குவாதமும், மோதலும் மூண்டு, பிக்குமார்கள் பரஸ்பரம் அவர்களின் அங்கிகளை (உடை) பிடித்து இழுபட்டதை இணையத்தள புகைப்படங்களிலும், ஏனைய செய்திகளிலும் காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பாக தமிழர் தரப்பு செய்திகளில் மிகைப்படுத்தி, அவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அளவிற்கு மீறிய நகைப்புடன் பார்க்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

கொழும்பு நகரில் பல அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலா மக்கள் சிங்கள இனத்தவர்கள். அவர்களோடு சில சிங்கள அரசியல்வாதிகளும், ஏனைய சமாதான விரும்பிகளும் இலங்கையில் போர் மூண்ட காலங்களில் இருந்து இன்று வரை அவ்வப்போது போருக்கெதிராக தமது எதிர்ப்பினையும், ஆர்பாட்ட ஊர்வலங்களையும், நடத்தியும், போரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு, நாட்டில் வாழும் மூவின மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போரை முடிவிற்கு கொண்டுவரும் படியும் அறிக்கைள் அனுப்புவது வழக்கம்.

அது போன்றே இம்முறையும் ஒரு நிகழ்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய இலங்கையின் சூழலில் யுத்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஜனநாயக செயற்பாட்டிற்கும், பாரிய எதிர்ப்புக் கிளம்பும் சூழல் கொழும்பில் காணப்படுவதற்கு அங்கு மாறியிருக்கும் அரசியலே காரணமாக இருக்கின்றது.

இந்த எதிர்ப்புக் குழுவினரை நெறிப்படுத்தி, வழிநடத்த சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருக்கும், ஜே.வி.பி. சிஹெல உருமைய, பிக்குகள் சங்கம் .... போன்ற அமைப்புகளும், அவை சார்ந்த ஏனைய அமைப்புகளும் பின்னணியில் இருப்பதும் முக்கிய காரணம்.

ஆனால் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையிலும் சமாதான விரும்பிகள் ‘யுத்தத்திற்கெதிரான போராட்டங்களில் ஈடுபடுவது மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம். இவ்வாறானவர்களின் பல வெளிநடவடிக்கைகளினால் தான் பல சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் தொடர்பாகவும், தமிழினப்பிரச்சனை தொடர்பாகவும் அவர்கள்அறியக்கூடியதாக இருக்கின்றது என்பதை பல தமிழர்களுக்கு தெரிவதில்லை. அவ்வாறு அவர்கள் அறியும்போது, தமிழர்கள் தொடர்பாக அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்த எண்ணக்கருத்தில் மாற்றம் நிகழ்வதற்கான சூழல் உருவாகும்.

அதே போன்று கொழும்பிலோ அல்லது ஏனைய சிங்கள புறநகர் பகுதிகளிலோ ஒரு மனிதக் குண்டு வெடிப்பினால் அல்லது வேறு வகையான குண்டு வெடிப்பினால் பெருந்தொகையான சிங்கள பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, தமிழர் பிரதேங்களினல் எதிர்ப்புத் தெரிவித்த வரலாறு இருந்திருக்கின்றதா? அல்லது ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? என்பதை நாம் நம்மைப்பார்த்து கேட்டவேண்டிய கேள்வி. அல்லது அவ்வாறான ஒரு ஏற்பாட்டை தமிழர்கள் செய்வதில்லை.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் நிறையவே கற்றுக்கொள்ளவும், எம்மை மாற்றிக் கொள்ளவும் வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

3 comments:

Unknown said...

இந்த விடயம் தொடர்பான என்னுடைய பதிவு

Anonymous said...

\\குண்டு வெடிப்பினால் பெருந்தொகையான சிங்கள பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, தமிழர் பிரதேங்களினல் எதிர்ப்புத் தெரிவித்த வரலாறு இருந்திருக்கின்றதா?\\

அப்படிசெய்தால்தான் தமிழ்துரோகி ஆகிவிடுவோமே?

Anonymous said...

போர் சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் தான். இடையே மக்கள் கொந்தழிப்பது அவர்கள் நிம்மதியாக வாழ்வதங்கு இதைக் கொச்சைப் படுத்த வேண்டாம்.
சிங்கள மக்கள் இறப்பது ஒன்றும் தமிழிருக்குக் கொண்டாட்டம் இல்லை. அவர்கள் கட்டனக் கூட்டம் அதற்கு வைத்தால் புலிகளால் அவர்கள் தாக்கப்படலாம்.