Sunday, August 27, 2006

தேனி - நிதர்சனம் இணையத்தளங்களின் பொறுப்பற்ற போக்கு!

தற்போது தமிழில் ஏராளமாக இணையத்தளங்கள் இலங்கைச் செய்திகளையும், தமிழர் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும், ஏனைய பல விடையங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் கணிசமான இணையத்தளங்கள் புலிகளின்; அரசியலுக்கெதிராகவும், அவர்களின் போராட்ங்கள், சிந்தனைகள், நடவடிக்கைள் போன்றவற்றுக்கெதிராகவும் தமது எதிர்ப்பினையும், கருத்தினையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்கள் பெரும்பாலும் புலிகளினால் தடைசெய்யப்பட்ட, ஏனைய தமிழ் இயக்கங்களினதும், அல்லது புலி அரசியலுக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களினாலும் நடாத்தப்படுகின்றது.

அந்த வகையில் தேனி இணையத்தளம் பரவலாக அறியப்பட்ட ஒன்றாம். ஆரம்ப காலங்களில் தேனியில் வரும் எழுத்துகள் புலிகளின் போக்கிற்கு மாற்றுக் கருத்தாக அல்லது புலிகளின் அரசியலை கருத்தியல் ரீதியாக விமர்சிக்கும் போக்கினைக் கொண்ட தளமாக காணக்கூடியதாக இருந்து. பின்னர் வெறும் புலி எதிர்ப்புப் பிரச்சாரமாகவும், புலிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தகவல்களை திரித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதில் சிறிதும் தயக்கம் காட்டாமல் வெளியிடும் அளவிற்கு அவர்களின் வறட்டு அல்லது சீரழிந்த அரசியல் சிந்தனை மேலோங்கியிருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது.

கடந்த வருடம் புங்குடுதீவு என்னும் கிராமத்தில் ஒரு இளம் பெண் தனது பெயரியதாயார் வீட்டுக்கு ஒவ்வொரு மலைப்பொழுதிலும் சென்று பின்னர் மறுநாள் காலையிலேயே தனது வீட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்பெண் பெரியதாயார் வீட்டுக்குச் செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் முகாமைத் தாண்டிச் செல்வதும் வழக்கம். அவ்வாறு ஒரு நாள் சென்ற போது அங்கிருந்த படையினர் சிலரினால் பலவந்தமாக, கூட்டிச் செல்லப்பட்டு, முகாமிற்கு அருகில் இருந்த, கைவிடப்பட்ட வீட்டிற்குள் வைத்து அந்தப்பெண்ணை பாலியல் வல்லுறவு மேற்கொண்டு, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த பாழ் அடைந்த கிணற்றினுள் வீசிவிட்டுச் சென்றுள்ளார்கள்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண், அவ்வ+ர் சாதாரண கிராமவாசி என அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களுடனும், அவ்வ+ர் பிரதேச மகளிடமும் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. ஆனால் இந்தச் செய்தியை தேனியில் வேறு விதமாக குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது, அந்தப் பெண் ஒரு புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்லது புலிகள் அமைப்போடு சம்பந்தப்பட்டவர் என்ற தோரணையில் கட்டுரையாளர் எழுதியிருந்தார். அதை தேனி இணையத்தளம் வெளியிட்யிருந்தது.

ஒரு செய்தியை வெளியிடும் போது அதன் நம்பகத் தன்மையை ஆராய்ந்திருக்க வேண்டும். அந்தக் கட்டுரையை வாசிக்கும் போது வேணுமென்றே திரித்து எழுதப்பட்டதாக தெரிகிறது. இதனால் தேனியில் வரும் ஏனைய உண்மையான செய்திகள், கட்டுரைகளும் உண்மைக்குப் புறம்பானதாக எண்ணத்தோன்றும் மனநிலையை உருவாக்கும்.

இதேபோன்று கண்மூடித்தனமாக புலிகளை ஆதரிக்கும் இணையத்தளமான ‘நிதர்சனம்’ ஆதாரமற்ற தகவல்களையும், மாற்றுக் கருத்தாளர்களையும், முற்போக்கு நிந்தனையாளர்களின் நடவடிக்கைகளுக்கு சேறு ப+சும் விதமாகவும், காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்ப்பதே தமது தலையாய கடமையாகவும் எடுத்துகொண்டு செய்திகளை பரப்புவதில் முன்நிற்கின்றார்கள். இவர்களின் கருத்திற்கு மாற்றுக் கருத்துக்கொண்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை புனைந்து வெளியிடுவதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல.

அண்மையில் கொழும்பு தெகிவளையில் சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ் லோகநாதன் பற்றிய செய்தியை வெளியிடும் போது கடைசிப் பத்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்கள். ‘கேதீஸ் தொடர்பான 'அண்டவாளங்களை' வெகுவிரையில் வெளியிடுவோம்’ என்று. கேதீஸ் தொடர்பாக விமர்சனங்கள் இருப்பது வேறு, சேறு ப+சுவது வேறு. விமர்சனங்கள் காழ்ப்புணர்வற்றனவாக இருக்க வேண்டும். கேதீஸ_க்கு ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சினையில் நிறையவே பங்கிருக்கின்றன. அதற்கான அவரின் உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. (25.80.2006 இல் கனடா - வைகறை பத்திரிகையில் அவர் தொடர்பாக கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கின்றது) ஆனால் நிதர்சனம் போன்ற தளங்கள் இம்மாதிரியான செய்திகளை தொடர்ச்சியாக வெளியீடுவார்களானால் அவர்கள் தொர்பான நம்பகத்தன்மையை இழந்து விடுவார்கள்.

செய்தித் தளங்கள் தங்களுக்குரிய உரிமையையும், சுதந்திரத்தையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லாது விடின், மக்கள் ஊடகங்களாக இவைகள் வலம் வரமுடியாதவைகளாகவே இருக்கும்.

2 comments:

Anonymous said...

ஐயா நாசமறுப்பான்,

தேனீயை விடுங்கள் அதுதான் போனால்போகிறது தர்சினியை புலித்தொடர்புக்காரி என்றது.
இந்த 'UTHR(J)' இருக்கிறதே அவர்களோ தர்சினியை ஒரு 'பாலியற் தொழிலாளி' என்று சொன்னதை என்ன சொல்ல? இத்தனைக்கும் அவர்களின் 'சின்னம்' ராஜினி திரிணகம!
இவ்வாறு அவர்கள் சொன்னதால் அதை 'சிக்கெனப் புடித்த' இலங்கை அமைச்சர் தமிழ்நாட்டிலும் அதைச் சொன்னார். அவங்களைச் குறை சொல்லி என்ன பிரயோசனம்.

வன்னியன் said...

ம். பரவாயில்லை.
நிதர்சனத்தைத் திருத்த தொடர்புடையவர்கள் முயலவேண்டுமென்பதே என் அவாவும்.

நான்கூட தேனியை ஒரு மாற்றுத் தளமாகப் பார்த்து வாசித்ததுண்டு. ஆனால் 'வல்வெட்டித்துறை அம்மன் கோயிலின் கோபுரத்தைவிட ஓரடி உயரமாக கட்அவுட் வைத்ததால்தான் சுனாமி வந்ததாக'ச் சொல்லி ஒரு கட்டுரை வெளியிட்டபோது (அதற்கு இணையத்தளம் பொறுப்பாக முடியாதென்று இப்போது மறுப்பு வரலாம்.) என் பார்வையை முற்றாக மாற்றிக்கொண்டேன்.
இது தேனிக்கு மட்டுமன்று, ஏனையவர்களுக்கும் பொருந்தும்.

இதே தர்சினி பாலியற்றொழிலாளி என்றும் கொல்லப்பட்டது புலிகளால்தானென்றும் பதிந்தவர்கள் எத்தனைபேர்?
திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பல்கலைக்கழக மாணவர்களும் புலிகளால்தான் கொல்லப்பட்டார்கள் என்று சொன்னதோடு, 'இவர்கள் ஏன் பொழுதுபட வெளியில் போனார்கள்?' என்று அதியற்புதக் கேள்வியெழுப்பியவர் யார்? (அதில் கொல்லப்பட்ட ஒருவரின் தந்தை (மருத்துவர்) தன் கண்முன்னாலேயே படையினர் சுட்டுக்கொன்றனர் என்று சாட்சியம் சொன்ன பின்பு வெளிவந்த கட்டுரையது)

இன்னும் நிறையச் சொல்லலாம். என்வரையில் விமர்சனங்கள் தேவையானவையே. ஆனால் தகவல்களைப் புரட்டக்கூடாது. இது இருதரப்புக்கும் பொருந்தும்.