Friday, April 21, 2006

தொடரும் வன்முறைகள் யாரைத் திருப்திப் படுத்த...



யாழ்மாவட்டம் புத்தூரில் ஐந்து இளைஞர்கள் சுடப்பட்டு அவர்கள் உடல்கள் இராணுவ முகாமில் இருந்து ஐந்நூறு யார் தொலைவில் கிடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கொலைக்கு இராணுவத்தினரே முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று அவ்வ+ர் மக்களும், தமிழ் செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன. ஆனால் இராணுவ தரப்பில் பேசவல்ல அதிகாரி இதை மறுத்துள்ளார்.

இலங்கையில், அண்மைய அமைதி முயற்ச்சிக்குப்பின்னர் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகள் இன்னும் பரவலாக்கப்பட்டு வருவதை இப் படுகொலைகள் மூலம் மேலும் அறியக்கூடியதாக உள்ளது.
இலங்கை இராணுவத்தினர், பொது மக்களிற்கு எரிச்சல் ஊட்டும் விதத்திலும், அல்லது அவர்கள் மீது வன்முறைகளை பிரயோகிப்பது போன்ற நடவடிக்கையால் மக்கள் படை என்னும் அமைப்பு இராணுவத்தினர் மீது ஆக்காங்கே கிளைமோர் கண்ணிவெடித்தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும், இதனால் மென்மேலும் இராணுவத்தினரின் அடாவடித்தனம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.
உண்மையில் இந்த மக்கள் படை என்பது யார் என்பது இன்னும் தெளிவுற அடையாளம் காணமுடியாத சூழலில் இவர்களுக்கு பின்னால் விடுதலைப்புலிகள் செயற்படுகின்றார்கள் என்பதை களநிலவரங்களில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.

அண்மைக்காலமாக புலிகளின் புதிய முயற்சியாக பொது மக்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சி வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டு அவை மேலும் விரிவாக்கப்பட்டு பெரும்தொகையான மக்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறிய செய்திகளை இணையத்தளச் செய்திகள் ஊடாக அறியக் கூடியதாக இருந்தது.

புலிகளைப் பொறுத்தவரை தாங்கள் மட்டுமே இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடுத்துபவர்களாக அல்லது எதிரானவர்களாக காணப்படுவதை விட ஒட்டு மொத்த தமிழ் மக்களுகம் இராணுவத்திற்கும் இலங்கை அரசிற்கும் எதிரானவர்களாக வெளிக்காட்டப்படுவதையே புலிகள் மிகவும் விரும்புகிறார்கள். இதில் உள்நோக்கு அரசியல் புலிகளுக்கு இருப்பதைக் காணலாம்.

ஆதாவது பலஸ்தீன போராட்டத்தை நாம் பார்போமாக இருந்தால் அங்கே இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் தமது கைகளுக்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு இஸ்ரேலிய இராணுவதிற்கு எதிராக போராட்டம் நடத்துவதை நாம் அன்றாடம் தொலைக்காட்சி செய்திகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிநவீன இராணுவ கவசவண்டிக்கு முன்பாக சிறுவர் முதல் பெண்கள், முதியோர்கள் என்று பாரபட்சமின்றி கற்களை வீசி தமது எதிர்பினைக் காட்டுவார்கள். இதையே புலிகளும் தமிழ் மக்களிடம் எதிர்பாக்கின்றார்கள். அல்லது மக்களைத் தூண்டுகிறார்கள். இன்றைய சூழலில் இது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் போராட்டமாக சர்வதேசங்களுக்கு காட்ட வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்துள்ளது.
ஈழப்போராட்டமானது தமிழ்மக்கள் போராட்டமாக 80பதுகளிலேயே பரவலாக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அனால் எமது விடுதலைப்போராளிகள் அன்று அதைச் செய்ய தவறியதால், இன்று தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான இடைவெளியை மறுக்க முடியாது.

தற்போதைய சூழலில் புலிகள், மக்கள் படையை வளர்தெடுக்க முயற்சிக்கும் அதே நேரம் சிங்கள தேசத்திலும் மக்கள் படைக்கெதிராக பேரினவாதிகள், அதாவது ‘காடையர்’கள் என்று தமிழ் சுழலில் பரவலாக அழைக்கப்படுகின்ற சிங்கள வன்முறையாளர்களை உருவாக்க சிறிதும் தயங்கமாட்டார்கள். இதன் வெளிப்பாட்டின் ஒரு வடிவமே அண்மையில் திருகோணமலையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறையாகும்.

ஆகவே இவ்வாறான வன்முறைகளை மென்மேலும் வளர்வதற்கான சூழலை உருவாக்குவதா? அல்லது இன்று சர்வதேச அரங்கில் தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் அரங்கேறியிருக்கும் தற்போதைய சூழலை மேலும் விரிவாக்க ஆக்கப+ர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதா என்பதை புலிகள் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா?

3 comments:

வசந்தன்(Vasanthan) said...

நல்ல பதிவு. நல்ல கேள்வி.

'நாசமறுப்பான்' எண்டு பாத்த உடன, ஆரோ புதுசா வந்திருக்கினமாக்குமெண்டு நினைச்சேன்.
அட, பழைய அருவி.

Anonymous said...

rptfud;
Sri Lanak

Gypfis vjph;f;fpwd; Ngh;topjhd; ePuk;... guthapy;iy..

Mdhy;jkpo; kf;fspd; nfhiyfis ePh; jpir jpUg;g ghh;g;gJ ey;yjy;y...

ckJ fUj;J... ckJ tpUg;gk;
Mdhy; ePh; ,yq;ifapy; ,Ue;jhy; njhpAk;... rj;jpakhf nrhy;fpNwd;....

vq;fl ,og;G cdf;F njhpahJ...
njhpe;jhy; eP ,g;gb vOjkhl;lha;...

pls use bamini font 2 view

Anonymous said...

சிவகரன்
sri Lanka
புலிகளை எதிர்க்கிறன் பேர்வழிதான் நீரம்... பரவாயில்லை..

ஆனால்தமிழ் மக்களின் கொலைகளை நீர் திசை திருப்ப பார்ப்பது நல்லதல்ல...

உமது கருத்து... உமது விருப்பம்
ஆனால் நீர் இலங்கையில் இருந்தால் தெரியும்... சத்தியமாக சொல்கிறேன்....

எங்கட இழப்பு உனக்கு தெரியாது...
தெரிந்தால் நீ இப்படி எழுதமாட்டாய்...