Saturday, August 26, 2006

கனேடிய தமிழ் ஊடகங்களும், தமிழர்களும்!

கனடாவில் பத்திற்கும் மேற்பட்ட வாராந்த தமிழ்ப்பத்திரிகைள் வெளிவருகின்றன. நிறையப் பக்கங்களுடன் வெளிவரும் இப் பத்திரிகைகளில் விளம்பரங்களே அதிகமாக காணப்படுகனிறன.

‘விளம்பரங்களே பத்திரிகையின் அச்சானி’ இது சான்றோர் வாக்கு. ஆனால் இங்கே விளம்பரங்களுக்கே பத்திரிகை என்று ஆகிப்போற்று. ஒரு பத்திரிகையின் தரமும், போக்கும் அச்சமூகத்தை பிரதிபலிக்கும் காரணிகளில் ஒன்று. ஆனால் எந்தப் பத்திரிகையும் அதை கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை.

சில காலமாக என்னுடைய அவதானிப்பின் படி, பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளும், கட்டுரைகளும், அல்லது ஏனைய படைப்புகளும் ஒரு சார்பானதாகவே இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது வெளியிடும் செய்திகளிலோ அல்லது கட்டுரைகளிலோ எந்தளவிற்கு நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை போன்றவற்றை யாரும் கருத்தில் கொள்வதில்லை. அல்லது அது பற்றி சிலாகிப்தும் இல்;லை. தமது சார்புநிலைகளுக்கு ஏற்றமாதிரி செய்திகள் வெளிவரவேண்டும் என்பதே இங்கு வாழும் பெரும்பாலானவர்களின் கணிப்பு அல்லது விருப்பம்.
இதை எழுதுவற்கு தூண்டியதன் காரணம் என்னவென்றால், அண்மையில் இலங்கையில் நடபெற்றுக் கொண்டிருக்கின்ற போர்ச் சம்பங்கள் தொடர்பாக இலண்டன் பி.பி.சி. பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நேரடித்தகவல்களாகவும், நேர்காணல் ஊடாகவும் தனது சேவையை நடத்திக்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையனிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டபோது அவர் இரத்தினச்சுருக்கமாக சில பதில்களை தெரிவித்திருந்தார். அது பலரின் கவனத்தையும் பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

இதே போன்று இன்னொரு முறை அவருடனான நேர்காணலின்போது அதாவது மூதூர் யுத்தமும், முஸ்லீம் மக்கள் இடம்பெயர்வும் தொடர்பானது. அப்போது இளம்திரையனின் பதிலில் கொஞ்சம் நெருடல் காணப்பட்டது. இதைக்கேட்டுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்கள் (ஈழத்தில் பி.பி.சியின் சேவையை 99வீதமானவர்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை என்பது எனது கருத்து) பொங்கி எழுந்துவிட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இளந்திரையனை சங்கடத்தில் மாட்டும் கேள்விகளை பி.பி.சியினர் கேட்கக் கூடாது என்பது தான். அல்லது இலங்கை இராணுவப்பேச்சாளரிடம் இவ்வாறு பி.பி.சியினர் நடந்துகொள்வார்களா? என்பதே. இம்மாதிரியான மனநிலையிலேயே இன்று அனேகமான புலம்பெயர் மக்கள் வாழ்கின்றார்கள். இவ்வகையினரின் மனநிலையை மேலும் மோசமாக்க புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும் தனியார் வானொலிகள், பத்திரிகைகள் வலுவ+ட்டுகின்றன.

23ம் புலிகேசியில் வரும் வசம்போல் சொல் புத்தி, சுயபுத்தி. புலம்பெயர் மக்கள் சொல் புத்தியாகவே இருக்கிறார்கள். உய்த்துணரும் பழக்கத்தை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதில்லை.

தற்போது பி.பி.சியை இத்தமிழர்கள் கேட்கக் கூடாது, புறம் தள்ள வேண்டும் என்று புலம்புகிறார்கள்.

‘சந்திரனைப் பார்த்து நாய் வவ் வவ் வவ்.... செய்தா யாருக்கு நட்டம்?

2 comments:

Anonymous said...

சந்திரன் நாய்களைச்சார்ந்து இருப்பதில்லை, ஆனால் மீடியாக்கள் மக்களைச்சார்தே இருக்கிறது, உண்மையை எதிர்பாக்கும் மக்களுக்கு, பொய்யான தகவல்களை கொடுத்தால் மக்கள் விரும்பி கேட்பார்களா? மக்கள் கேட்காவிட்டால் தமிழ்சேவையை இழுத்துப்பூட்ட வேண்டியதுதான்.
பழமொழி தெரிந்திருந்தால் மட்டும் போதாது, சரியான பழமொழியை இடும் அறிவு இருக்கவேண்டும்.

சந்திரனை பார்த்து நாய்கள் குரைப்பது இதற்க்கு பொருந்தாது:-)

Anonymous said...

ஐயா பதிவிற்கு நன்றி,

‘மீடியாக்கள் மக்களைச் சார்ந்தே இருக்கின்ற’ என்ற உங்கள் கருத்தில் உண்மை இருக்கின்றன. ஆனால் நான் குறிப்பிடுவது கண்மூடித்தனமான சார்புநிலை மக்களை. ஏலவே எனது பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் ‘ஈழத்தில் 99வீதமான தமிழ் பேசும் மக்கள் பி.பி.சி. தமிழ் சேவையை குறைத்து மதிப்பிடுவதில்லை.’ (சம்பந்தப்பட்ட இரு பகுதியினரிடமும் தான் கேள்வி கேட்பார்கள் ) எனவே பி.பி.சி. சர்வதேசம் சார்ந்த சேவை. எனவே குறிப்பிட்ட ஒரு பகுதியினர் இங்கே ‘சந்திரனைப் பார்த்த நாய்’ என்பது பொருந்தும் என்பது எனது கருத்து ஐயா!
nasamaruppan